
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி,கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.