
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமிருக்கும் இடத்தை தென் ஆப்பிரிக்க அணி நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் இது ஜோஸ் பட்லரின் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் மறுமுனையில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் உடல்நலக்குறைவால் இப்போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஹென்றிச் கிளாசென் லெவனில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக மார்க்ரம் செயல்படுகிறார். இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித்(வ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(சி), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேட்ச்), ஹென்ரிச் கிளாசென்(டபிள்யூ), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி