2-lg.jpg)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து அணியும் தங்களது அரையிறுதிச்சுற்று வாய்ப்பை நேற்றைய தினம் உறுதிசெய்ததது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், இக்ராம் அலிகில், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹா
தென் ஆப்பிரிக்கா : குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அண்டில் பெஹ்லுக்வாயோ, டேவிட் மில்லர், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.