கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.

இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 20, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது இன்று ஒருநாள் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது பெரும் விவாதமானது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் பெயர் நீக்கப்பாட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்சமயம் அந்த பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
2. இங்கிலாந்தின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட் கடந்த 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர், தற்போது இங்கிலாந்து அண்டர்19 மற்றும் அண்டர் 17 அணிகளின் பயிற்சியாளராக விரும்புதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கூடிய விரைவில் அவர் பயிற்சியாளராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஆடம் ஸாம்பாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி, இப்போட்டியில் ஸாம்பா மோசமான வார்த்தைகளை பேசியதால், அவருக்கு ஒரு கரும்புள்ளி அபராதமாக விதிக்கப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காதது தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் முன்னாள் வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின், முகமது கைஃப், அபிஷேக் நாயர் என பல்வேறு தரப்பில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
5. சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
Win Big, Make Your Cricket Tales Now