
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.
அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஆஸி அணியில் மிட்சேல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக்.