
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கெனவே இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளதால் வெறும் சம்பிரதாய போட்டியாகவே இது நடைபெறவுள்ளது.
அதன்படி மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரிய மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கே), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்
நெதர்லாந்து: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.