நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்தது. மெத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் முன்னேறின.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, இந்திய அணியை பந்துவீச அழைத்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பிடித்துள்ளார். இரண்டு ஆசிய ஜாம்பவான்களான இந்தியா - இலங்கை அணிகள் வரலாற்றில் ஒன்பதாவது முறையாக நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா : ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கே), துனித் வெல்லாலகே, துஷான் ஹேமந்த, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரானா.