இந்திய ஒருநாள், டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் அடுத்த ஒருநள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

தற்சமயம் இந்திய அணியில் தற்போது மூன்று வடிவங்களிலும் வெவ்வேறு கேப்டன்கள் உள்ளனர். ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததன் காரணமாக, டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடரும் நிலையில், ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீடித்து வருகிறர். ஆனால் தற்சமயம் ரோஹித் (38 வயது) மற்றும் சூர்யகுமார் (35 வயது) ஆகியோரின் வயது காரணமாக, இந்திய அணி மூன்று வடிவங்களுக்கும் சேர்த்து ஒரே கேப்டனை தேர்வு செய்ய பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சுப்மான் கில்
இந்த பட்டியலில் சுப்மன் கில்லின் பெயர் முதலிடத்தில் உள்ளது. தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில், ஒருநாள் அணியிலும் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கும் துணைக்கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பாட்டு வருகிறார். இதன் காரணமாக தற்சமயம் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவுக்கு பிறகு இந்திய அணியின் முழு நேர கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படலாம்.
ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முதலாவதாக, அவரது தலைமையின் கீழ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024 பட்டத்தை வென்றது. அதன் பிறகு, அவரது தலைமையின் கீழ், பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியை எட்டிய நிலையிலும், ஆர்சிபி அணியிடம் தோல்வியைத் தழுவியது. கேப்டன் பதவியைப் பற்றி பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு கில்லை விட அதிக அனுபவம் உள்ளது. அதனால், இந்திய அணியின் அடுத்த ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ஸ்ரேயாஸ் செயல்பட வாய்ப்புள்ளது.
அக்சர் படேல்
Also Read: LIVE Cricket Score
இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் அக்ஸர் படேல். நடப்பு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேச தொடரில் அக்சர் படேல் இந்தியா அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் 2025 இல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் தற்சமயம் ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஒரு முக்கியமான வீரராகவும் உள்ளார். அத்துடன் இந்தியாவின் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் அக்சர் ஒரு முக்கிய வீரராக இருந்தார். இருப்பினும், கில் மற்றும் ஐயருக்கு முன்னால் கேப்டன் பதவிக்கான போட்டியில் அவர் சற்று பின்தங்கியிருப்பதாகத் தெரிகிறது.
Win Big, Make Your Cricket Tales Now