சர்வதேச கிரிக்கெட்டில் சதனைகள் படைக்க காத்திருக்கும் கிளென் மேக்ஸ்வெல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றன.
இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக சிக்ஸர்கள்
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளர். அதன்படி இந்த போட்டியில் அவர் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்ச்த்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 150ஆவது சிக்ஸரை பதிவுசெய்வார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ சிக்ஸர்களை அடித்த 5ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
இதுவரை ரோஹித் சர்மா, மார்ட்டின் கப்தில், முகமது வாசிம் மற்றும் ஜோ பட்லர் மட்டுமே இந்த சாதனையைச் செய்ய முடிந்தது. கிளென் மேக்ஸ்வெல் இதுவரை 123 டி20 சர்வதேச போட்டிகளில் 113 இன்னிங்ஸ்களில் 146 சிக்சர்களை அடித்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா- 205
- மார்ட்டின் கப்தில்- 173
- முகமது வாசிம்- 168
- ஜோஸ் பட்லர்- 160
- நிக்கோலஸ் பூரன்- 149
- சூர்யகுமார் யாதவ்- 146
- கிளென் மேக்ஸ்வெல்- 146
அலெக்ஸ் ஹேல்ஸை முந்த வாய்ப்பு
இதுதவிர்த்து, இந்த போட்டியில் மேக்ஸ்வெல் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அலெக்ஸ் ஹேல்ஸை முந்தி ஐந்தாவது இடத்தை பிடிப்பார். மேக்ஸ்வெல் இதுவரை 485 போட்டிகளில் 454 இன்னிங்ஸ்களில் 563 சிக்ஸர்கள் அடித்துள்ளார், அதே நேரத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 503 போட்டிகளில் 499 இன்னிங்ஸ்களில் 566 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2500 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள்
Also Read: LIVE Cricket Score
இது தவிர்த்து இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் எடுத்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் நான்காவது வீரர் எனும் பெருமையையும் மேக்ஸ்வெல் பெறுவார். இதுவரை, வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (129 போட்டிகளில் 2,551 ரன்கள் மற்றும் 149 விக்கெட்டுகள்), பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் (119 போட்டிகளில் 2,514 ரன்கள் மற்றும் 61 விக்கெட்டுகள்) மற்றும் மலேசியாவின் வீரந்தீப் சிங் (102 போட்டிகளில் 3,013 ரன்கள் மற்றும் 97 விக்கெட்டுகள்) மட்டுமே இதைச் செய்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now