உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்!

உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. ஏற்கனவே உலகக் கோப்பையிலிருந்து அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறிய இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக இந்த சம்பிரதாய போட்டியில் மோதின. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே குஷால் பெரேரா 4 ரன்களில் அவுட்டானார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News