
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. ஏற்கனவே உலகக் கோப்பையிலிருந்து அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறிய இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக இந்த சம்பிரதாய போட்டியில் மோதின. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே குஷால் பெரேரா 4 ரன்களில் அவுட்டானார்.
அந்த நிலைமையில் வந்த கேப்டன் குஷால் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் நிசாங்காவும் போராடி 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதை தொடர்ந்து சமரவிக்ரமா 41 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சுழலில் போராடி அவுட்டானார்.
அப்போது இலங்கையின் நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் பேட்டிங் செய்வதற்காக களமிறங்கினார். ஆனால் களத்திற்குள் வந்த பின் தம்முடைய ஹெல்மெட்டின் பாதுகாப்பு கயிறு சரியாக இல்லாமல் இருப்பதை கவனித்த அவர் மீண்டும் வேறு ஹெல்மெட்டை தங்களது அணி வீரர்களிடமிருந்து வாங்க முயற்சித்தார். குறிப்பாக பவுண்டரிக்குள் வந்து விட்டு பிட்ச் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு முன்பாகவே நடு மைதானத்தில் அவர் அதை செய்து கொண்டிருந்த சமயத்தில் 3 நிமிடம் முடிந்து போனது.