இறுதி, அரையிறுதி போட்டிக்கான பிட்சை மாற்றிய பிசிசிஐ; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இறுதி மற்றும் அரையிறுதி போட்டிக்கான பிட்சை மாற்றிய பிசிசிஐ; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது, இந்தப் போட்டி நடக்க உள்ள பிட்ச்சை இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிற உதவி பயிற்சியாளர்கள் இரு நாட்கள் முன்பு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட பிட்ச்சை பார்வையிட்டு, அதில் புற்களை நீக்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை வைத்ததாக செய்தி வெளியானது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News