உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது, இந்தப் போட்டி நடக்க உள்ள பிட்ச்சை இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிற உதவி பயிற்சியாளர்கள் இரு நாட்கள் முன்பு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட பிட்ச்சை பார்வையிட்டு, அதில் புற்களை நீக்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை வைத்ததாக செய்தி வெளியானது.
ஆனால், இங்கிலாந்தின் செய்தி நிறுவனம் ஒன்றில் பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடக்க உள்ள அஹ்மதாபாத் மைதானத்தில் ஐசிசி மேற்பார்வையாளர் அட்கின்சன் கூறியதற்கு மாறாக வேறு ஒரு பிட்ச்சை இறுதிப் போட்டிக்கு தயார் செய்து இருப்பதாகவும், அதே போல இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள பிட்ச் போட்டிக்கு முந்தைய தினம் இரவோடு இரவாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த தகவலை முக்கிய நியூசிலாந்து ஊடகம் ஒன்றும் பெரிய பிரச்சனையாக மாற்றி உள்ளது. அந்த ஊடகத்தில் இறுதிப் போட்டி பிட்ச்சை பிசிசிஐ மாற்றியதையும், அரை இறுதிப் போட்டிக்கான பிட்ச் மாற்றப்பட்டது குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது. முதலில் இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு மும்பை வான்கடேவில் இதுவரை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறாத ஏழாம் நம்பர் பிட்ச்சை பயன்படுத்த வேண்டும் என ஐசிசி மேற்பார்வையாளர் அட்கின்சன் கூறி இருக்கிறார்.