கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.

இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 19, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேசமயம் அவருக்கு பதிலாக டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வேகப்பந்து வீச்சாளார் குவேனா மகாபா தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணைக்கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷிவம் தூபே, ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐய்ர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
3. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மஹாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா தனது முதல் ஆட்டத்திலேயே சதமடித்து கவனம் ஈர்த்துள்ளார். முன்னதாக மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த பிரித்வி ஷா, மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தற்போது மஹாராஷ்டிரா அணிக்காக அவர் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து கம்பேக் கொடுக்க தயாராக உள்ளார்.
4. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இளம் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா இந்திய மகளிர் ஒருநாள் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
5. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் முன்னதாக ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோர் தற்போது பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஏ பிரிவு ஒப்பந்த பட்டியலில் எந்தவொரு வீரருக்கும் இடம் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now