
நடப்பாண்டு ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பையில், 6 அணிகள் தலா 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குரூப்-ஏவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளமும், குரூப்-பியில் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி முல்தானில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான்: பாபர் ஆசாம் (கே), ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசிம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.
நேபாளம்: குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோஹித் படேல்(கே), ஆரிப் ஷேக், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லாமிச்சானே, லலித் ராஜ்பன்ஷி