-mdl.jpg)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 26 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸின் தனித்துவ சாதனையை சமன்செய்துள்ளது.