சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி; பதிலடி கொடுத்த புவனேஷ்வர் குமார் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 26 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
Also Read
இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வேல் - வைபவ் சூர்யவன்ஷி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்படி இன்னிங்ஸின் 5அவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட சூர்யவன்ஷி தேர்ட் மேன் திசையில் சிக்ஸர் அடித்து அசத்தினார். இதனையடுத்து இராண்டவது பந்தையும் அடிக்க முயன்ற அவர் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் புவனேஷ்வர் குமார் தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
Sailing six
— IndianPremierLeague (@IPL) April 24, 2025
Flying stump
Watch Bhuvneshwar Kumar Vaibhav Suryavanshi in a captivating battle #RR 72/2 after 6 overs.
Updates https://t.co/mtgySHgAjc #TATAIPL | #RCBvRR pic.twitter.com/cMVKJGgNtp
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜுரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சன்தீப் சர்மா
இம்பாக்ட் வீரர்கள்: வைபவ் சூர்யவன்ஷி, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடும் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
Also Read: LIVE Cricket Score
இம்பாக்ட் வீரர்கள்: சுயாஷ் ஷர்மா, ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தகே, ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்
Win Big, Make Your Cricket Tales Now