
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலியில் இந்த போட்டியின் போது சிஎஸ்கே நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவின் சிறப்பு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பி பெற்றுள்ளார். அதன்படி, இப்போட்டியில் ரவீந்திர் ஜடேஜா 4 கேட்சுகளை பிடிக்கும் பட்சத்தில் தனது 110அவது கேட்ச்சை பூர்த்தி செய்வார். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த இரண்டாவது வீரர் எனும் சுரேஷ் ரேய்னாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.