
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ராஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா : கேஎல் ராகுல்(கே), ராஜத் பட்டிதார், சாய் சுதர்சன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார்.
தென் ஆப்பிரிக்கா: டோனி டி ஸோர்ஸி, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாத் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்.