ஆசிய கோப்பை 2025: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Afghanistan Squad For T20 Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் இத்தொடர்களுக்கான அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், சல்மான் அலி ஆகா தலைமையில் பாகிஸ்தான் அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் உள்ளிட்ட அணிகள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ரஷித் கான் தலைமையிலான இந்த அணியில் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசான்ஃபர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷித் கான், நூர் அஹ்மத், முகமது நபி ஆகியோருடன் முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசான்ஃபர் ஆகியோர் சுழற்பந்து வீச்சை வலிமையடை செய்துள்ளது.
மேற்கொண்டு இப்ராஹிம் ஸத்ரானும் ஆஃப்கானிஸ்தான் டி20 அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக ஹஸ்ரதுல்லா ஸஸாய் ஆஃப்கானிஸ்தான் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ரஹ்மனுல்லா குர்பார், செதிகுல்லா அடல், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், நவீன் உல் ஹக், குல்பதீன் நைப், கரீம் ஜானத் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் டி20 அணி: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷரபுதீன் அஷ்ரஃப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்ஃபர், நூர் அஹ்மத், ஃபரித் மாலிக், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now