
Tabraiz Shamsi All Time T20I XI: தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி தனது ஆல் டைம் சர்வதேச டி20 லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தப்ரைஸ் ஷம்ஸி. அவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் 2 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் அவர் டெஸ்டில் 6 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 73 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில் ஷம்ஸி சமீபத்தில் தனது ஆல் டைம் சர்வதேச டி20 லெவன் அணியை அறிவித்துள்ளர். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலும், தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக்கையும் தேர்வு செய்துள்ளார். இதில் கெயில் டி20 கிரிக்கெட்டில் 14,562 ரன்களைச் சேர்த்து அதிக ரன்களை எடுத்த வீரராகவும், டி காக் சர்வதேச கிரிக்கெட்டில் 2,564 ரன்களையும் எடுத்துள்ளார்.