
Cheteshwar Pujara Retirement: இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என்ற அழைக்கப்பட்டும் சட்டேஷ்வர் புஜாரா அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணியின் அனுபவ வீரர்களில் ஒருவர் சட்டேஷ்வர் புஜரா. இந்தியா அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான புஜாரா இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் அவர் 19 சதங்கள், 35 அரைசங்கள் என 7,195 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இவரது நிதான ஆட்டத்தின் காரணமாக இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்றும் ரசிகர்களை அழைப்பதுண்டு.
மேலும் பல ஆண்டு காலமாக இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜரா, ஃபார்ம் இழப்பு காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். அதன்பின்னரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்றையா தினம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.