WI vs SA, 2nd Test: மார்க்ரம், வெர்ரைன் அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!

WI vs SA, 2nd Test: மார்க்ரம், வெர்ரைன் அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News