கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.

Top-5 Cricket News of the Day : ஆகஸ்ட் 2, 2025 அன்று கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இதில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தமாக 119.4 ஓவர்கள் வீசி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் அவர் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளதாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2. இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி 374 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தியதுடன் 118 ரன்களைச் சேர்த்தார். மேலும் ஆகாஷ் தீப் 66 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3. ஜஸ்பிரித் பும்ராவின் வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு நடவடிக்கை உடலில் மிகவும் கடினமாக உள்ளது என்றும், இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு உடற்தகுதியை பராமரிக்க வழக்கமான இடைவெளிகள் தேவை என்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார். மேலும் பும்ராவின் பணிச்சுமையைக் கண்காணிக்கும் பொறுப்பை மற்ற பந்து வீச்சாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
4. 2025-26 துலீப் கோப்பை தொடருக்கான கிழக்கு மண்டல அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக இஷான் கிஷானும், துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து ரியான் பராக், ஆகாஷ் தீப் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரிஸர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
5. எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டும் நடைபெறவுள்ளது. இதில் துபாயில் இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 10 போட்டிகளும், அபுதாபியில் 8 போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதிலும் குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now