ஆசிய கோப்பை 2025: அபுதாபி, துபாயில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டும் நடைபெறவுள்ளது.

ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம்.
மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளதன் காரணமாக லீக், சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டி என மூன்று முறை நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு தொடரின் முதல் லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி தங்களுடன் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான மைதானங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டுமே நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதில் துபாயில் இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 10 போட்டிகளும், அபுதாபியில் 8 போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதிலும் குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றொரு புகழ்பெற்ற மைதானமாக ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஒரு போட்டி கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை 2025 அட்டவணை
- செப்டம்பர் 9: ஆஃப்கானிஸ்தான் vs ஹாங்காங் - அபுதாபி
- செப்டம்பர் 10: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - துபாய்
- செப்டம்பர் 11: வங்கதேசம் vs ஹாங்காங் - அபுதாபி
- செப்டம்பர் 12: பாகிஸ்தான் vs ஓமான் - துபாய்
- செப்டம்பர் 13: வங்கதேசம் vs இலங்கை - அபுதாபி
- செப்டம்பர் 14: இந்தியா vs பாகிஸ்தான் - துபாய்
- செப்டம்பர் 15: இலங்கை vs ஹாங்காங் - அபுதாபி
- செப்டம்பர் 16: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - துபாய்
- செப்டம்பர் 17: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -அபுதாபி
- செப்டம்பர் 18: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் -துபாய்
- செப்டம்பர் 19: இந்தியா vs ஓமான் - அபுதாபி
Also Read: LIVE Cricket Score
சூப்பர் 4 சுற்று
- செப்டம்பர் 20: குரூப் பி தகுதிச் சுற்று 1 vs குரூப் பி தகுதிச் சுற்று 2- துபாய்
- செப்டம்பர் 21: குரூப் ஏ தகுதிச் சுற்று 1 vs குரூப் ஏ தகுதிச் சுற்று 2 - துபாய்
- செப்டம்பர் 23 : குரூப் ஏ தகுதிச் சுற்று 1 vs குரூப் பி தகுதிச் சுற்று 2 - அபுதாபி
- செப்டம்பர் 24: குரூப் B தகுதிச் சுற்று 1 vs குழு A தகுதிச் சுற்று 2 - துபாய்
- செப்டம்பர் 25: குழு A தகுதிச் சுற்று 2 vs குழு B தகுதிச் சுற்று 2 - துபாய்
- செப்டம்பர் 26: குழு A தகுதிச் சுற்று 1 vs குழு B தகுதிச் சுற்று 1 - துபாய்
- செப்டம்பர் 28: இறுதிப் போட்டி - துபாய்
Win Big, Make Your Cricket Tales Now