இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி; ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி; ரசிகர்கள் அதிர்ச்சி!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் அரசின் தலையீடு இருப்பதாகவும் தன்னாட்சியாக செயல்படவில்லை எனவும் கூறியுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் படு தோல்வியை சந்தித்து இருந்த இலங்கை அணிக்கு ஐசிசியின் நடவடிக்கை மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் இலங்கை அணியானது எந்தவொரு ஐசிசி தொடர்களில் பங்கேற்க முடியாத சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News