ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறி அசத்தின.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் இரு அணிகளும் இதுநாள் வரை உலகக்கோப்பை தொடரை வென்றதில்லை என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: தஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட் (கே), மரிஸான் கேப், அன்னேக் போஷ், சோலே ட்ரையோன், சுனே லூஸ், நதின் டி கிளார்க், சினாலோ ஜாஃப்டா, அன்னேரி டெர்க்சன், நோன்குலுலேகோ மலாபா, அயபோங்கா காக்கா
நியூசிலாந்து மகளிர் அணி: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), புரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்