
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் குஜாராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வியுடன் புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வியாட்-ஹாட்ஜ், எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ரக்வி பிஸ்ட், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், சினே ராணா, கிம் கார்த், பிரேமா ராவத், ரேணுகா சிங் தாக்கூர்
குஜராத் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: பெத் மூனி, ஹர்லீன் தியோல், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தயாளன் ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னர்(கேப்டன்), டியாண்டிரா டோட்டின், காஷ்வீ கெளதம், பார்தி ஃபுல்மாலி, மேக்னா சிங், தனுஜா கன்வார், பிரியா மிஸ்ரா