
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் யுபி வாரியர்ஸ் அணி முந்தைய தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா அல்லது அடுத்தடுத்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியில் மீண்டும் வெற்றிபெற்று அசத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
யுபி வாரியர்ஸ் பிளேயிங் லெவன்: கிரண் நவ்கிரே, ஜார்ஜியா வோல், விருந்தா தினேஷ், தீப்தி ஷர்மா(கே), ஸ்வேதா செஹ்ராவத், கிரேஸ் ஹாரிஸ், சினெல்லே ஹென்றி, உமா செத்ரி, சோஃபி எக்லெஸ்டோன், கிராந்தி கவுட், கவுஹர் சுல்தானா
குஜராத் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர்(கே), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், டியான்ட்ரா டோட்டின், காஷ்வீ கெளதம், பார்தி ஃபுல்மாலி, மேக்னா சிங், தனுஜா கன்வார், பிரியா மிஸ்ரா.