
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 21) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே ஒரு போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்பிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, பென் கரன், ஜெய்லார்ட் கும்பி, கிரேக் எர்வின் (கே), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, பிரையன் பென்னட், நியூமன் நியாம்ஹுலி, ரிச்சர்ட் ங்காரவா, வெலிங்டன் மஸகட்சா, ட்ரெவர் குவாண்டு
ஆஃப்கானிஸ்தான்: செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில், பிலால் சமி, ரஷீத் கான், அல்லா கசான்ஃபர், ஃபரீத் அஹ்மத் மாலிக்.