Advertisement
Advertisement

Travis head

இந்தியாவை எதிர்கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை - டிராவிஸ் ஹெட்!
Image Source: Google

இந்தியாவை எதிர்கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை - டிராவிஸ் ஹெட்!

By Bharathi Kannan November 16, 2023 • 23:21 PM View: 191

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி டேவிட் மில்லரின் அதிரடியான சதம் காரணமாக 49.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. தொடக்கத்தில் அதிரடியாக விளைடிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்களையும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றிக்கு உதவியதால் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

Related Cricket News on Travis head