
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளராக அறியபடுபவர் டிம் சௌதீ. இதுவரை நியூசிலாந்து அணிக்கக 107 டெஸ் போட்டிகளில் விளையாடியுள்ள டிம் சௌதீ பந்துவீச்சில் 391 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 2245 ரன்களையும் எடுத்துள்ளார்.
அதன்பின் கடந்தாண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை ஒன்றை தனது பெயரில் வைத்துள்ளார். அதாவது அவர் 2008 ஆம் ஆண்டு நேப்பியரில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார், இதில் சிறப்பு என்னவென்றால் அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 40 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 77 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுவே டிம் சௌதீயின் தனித்துவ சாதனைக்கு சாதனைக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் தனது அறிமுக போட்டியில் 77 ரன்களை அடித்த நிலையில், அதன்பின் கிட்டத்திட்ட 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவரால் அந்த எண்ணிக்கையைத் தாண்ட முடியவில்லை. இதன்மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அடித்தே ரன்களையே தனது இறுதிப்போட்டிவரை அதிகபட்ச ஸ்கோராக கொண்ட வீரர் எனும் சாதனைய படைத்துள்ளார்.