World cup
உலகக்கோப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடக்கம்?
இந்தியாவில் முதன் முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் முழுமையாக நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களில் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர்15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான தேதியை மாற்றம் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மேலும் சில கிரிக்கெட் வாரியங்களும் தேதி மாற்றம் செய்வதற்காக கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
Related Cricket News on World cup
-
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தேதி மாற்றம் - ஜெய் ஷா!
உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையில் பல மாற்றங்கள் நடக்க இருப்பதாகவும் அட்டவணையில் புதிய தேதி இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார். ...
-
ஓய்வு முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்துள்ளார். ...
-
நம்முடைய வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள் - கபில் தேவ்
முக்கியமான வீரர்கள் காயமடையாமல் இருப்பதே உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதற்கான முதல் வழி என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, ஐசிசி விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் முதலில் இதை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய vs பாகிஸ்தான் போட்டி; மருத்துவமனை படுக்கையை புக் செய்யும் ரசிகர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்கு மருத்துவமனை படுக்கையை ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
சூர்யகுமார் யாதவ் நிலையை எட்டுவதற்கு நிறைய உழைப்பு தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது - சவுரவ் கங்குலி!
ஜெய்ஸ்வால் கண்டிப்பாக உலககோப்பையில் விளையாடவேண்டும். டாப் ஆர்டரில் இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ராகுல், ரோஹித்தை சந்திக்க விண்டீஸ் புறப்படும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் புதிய தேர்வுகுழு தலைவராக பதவியேற்றுள்ள அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் சென்று, இந்திய அணிக்குறித்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: ஈடன் கார்டன் மைதானத்தின் போட்டி டிக்கெட் விலை அறிவிப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்தியா வராது - எஹ்சன் மசாரி!
ஆசிய கோப்பையை தனது மண்ணில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வராது என பாகிஸ்தான் விளையாட்டு துறை அமைச்சர் எஹ்சன் மசாரி தனது ...
-
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரோஹித் சர்மாவும் வெற்றிகரமான கேப்டனாக வருவார் - முகமது கைஃப் நம்பிக்கை!
சில அடிப்படை தவறுகளை சரி செய்தால் ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
எந்த மைதானத்தில் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
எந்த கிரிக்கெட் மைதானத்திலும் விளையாடி எந்த அணியையும் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47