ENG vs SA, 2nd T20I: ரொஸ்ஸோ, ஷம்ஸி அபாரம்; தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Fri, Jul 29 2022 11:55 IST
2nd T20I: Rilee Rossouw And Tabraiz Shamsi Star As South Africa Level Series Against England (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. அந்த அணியின் ரிலே ருசோவ் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களை குவித்தார். ரீஸா ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய விரைவில் அவுட்டானார். 

இப்போட்டியில் 14 பந்துகளை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். மேலும் அந்த அணியில் மொயீன் அலி 28 ரன்னும், ஜேசன் ராய் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், இங்கிலாந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் பெலுகுவாயோ, ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை