ரிஷப் பந்தை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி
Jofra Archer Video: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்திய அணியின் ரிஷப் பந்த் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது.
இதனால் முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 192 ரன்களிலேயே ஆல் அவுட்டானதுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்று வரும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பந்த் வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்படி இன்றைய நாள் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய நிலையில் அந்த ஓவரை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரிஷப் பந்த் இறங்கி வந்து விளையாடியதுடன் பவுண்டரியையும் விளாசினார்.
அதன்பின் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது லைன் மற்றும் லெந்த்தை மாற்றிய நிலையில் ரிஷப் பந்த் தடுத்து விளையாடும் முயற்சியில் இறங்கினார். அச்சமயத்தில் அந்த ஓவரின் 4அவது பந்தை ஆர்ச்சர் பேக் ஆஃப் லெந்தில் வீசிய நிலையில் ரிஷப் பந்த் அதனை விட முயற்சித்தார். ஆனால் அந்த பந்து எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக ஸ்விங் ஆனதுடன் ஸ்டம்புகளையும் பதம் பார்த்தது. இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ரிஷப் பந்த் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
Also Read: LIVE Cricket Score
இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.