பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட்: 90 வீராங்கனைகள் தேர்வு!

Updated: Wed, Feb 02 2022 18:23 IST
90 players picked in inaugural edition of Bengal Women's T20 Blast (Image Source: Google)

பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பிப்ரவரி 7 முதல் 23 வரை போட்டி நடைபெறவுள்ளது. ஃபேன்கோட் செயலியில் இப்போட்டிகல் நேரலையில் ஒளிபரப்பாகும். 

இந்த டி20 போட்டியில் ஈஸ்ட் பெங்கால் கிளப், ஆர்யன் கிளப் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறுகிறது.  

 

இதனால் கல்யாணி நகரில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அகாதெமி மைதானத்தில் மகளிர் டி20 பிளாஸ்ட் போட்டியின் அனைத்து ஆட்டங்களும் நடைபெறுகின்றன. ருமேலி தர், சுகன்யா பரிதா, வனிதா வி.ஆர். போன்ற இந்தியாவுக்காக விளையாடிய சர்வதேச வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். 

இதனை பெங்கால் கிரிக்கெட் சங்கம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை