அசுர வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; க்ளீன் போல்டான கவாஜா!

Updated: Thu, Jul 06 2023 19:39 IST
A 94mph Mark Wood rocket cleans up Usman Khawaja! (Image Source: Google)

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில் போப், ஆண்டர்சன் மற்றும் டங்க் ஆகியோருக்கு பதில் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் மொயின் அலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன், ஹேசல்வுட் மற்றும் நேதன் லயன் ஆகியோருக்கு பதில் டாட் மர்ஃபி, மிட்செல் மார்ஷ் மற்றும் போலாந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து டேவிட் வார்னர் - கவாஜா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் பந்தை சந்திக்க வார்னர் தயாராக, இந்தப் பக்கம் முதல் ஓவரை வீச பிராட் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய 5வது பந்திலேயே வார்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் 16ஆவது முறையாக பிராட் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். பின்னர் இன்னொரு பக்கம் மார்க் வுட் 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்துவீசினார்.

தொடர்ந்து 3 ஓவர்களில் ஒரு ரன்னை கூட கொடுக்காமல் பந்துவீசிய அவர், 4ஆவது ஓவரில் கவாஜாவின் விக்கெட்டை தட்டி தூக்கினார். தொடர்ந்து லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இணைந்தது. ஆஸ்திரேலிய அணியை இருவரும் சேர்ந்து மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் லபுஷேன் 21 ரன்களிலும், பிராட் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 85 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

 

இதனால் களத்தில் டிராவ்ஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் கூட்டணி இருக்கிறது. பின்னர் 91 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டது. முதல் செஷனிலேயே இங்கிலாந்து அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், ஆஸ்திரேலிய அணி மிரண்டி போனது. இந்நிலையில் உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டை மார்க் வுட் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை