உலகக்கோப்பை 2023: இந்தியா வந்தடைந்த ஆஃப்கான் வீரர்கள்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் 19 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனொரு பகுதியாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று இந்தியா வந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று காலை ஆஃப்கானிஸ்தான் அணியினர் வந்தனர். அவர்களுக்கு நட்சத்திர விடுதியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் 7ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற உள்ள லீக் போட்டியில் ஆஃப்கன் அணி விளையாட உள்ளது. எதிரணியை அப்செட் செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்டுள்ளது ஆஃப்கன் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.