AFG vs NED, 3rd ODI: நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Tue, Jan 25 2022 21:05 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ரியாஸ் ஹுசென், நஜிபுல்லா சத்ரான் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களைச் சேர்த்தது. 

இதிலதிகபட்சமாக் நஜிபுல்லா சத்ரான் 71 ரன்களையும், ரியாஸ் ஹுசென் 50 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு ஸ்காட் எட்வர்ட்ஸ் - காலின் அக்கர்மேன் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 54 ரன்களில் எட்வர்ட்ஸ் ஆட்டமிழக்க, 81 ரன்களில் அக்கர்மேனும் விக்கெட்டை இழந்தார். 

அடுத்து வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் 42.4 ஓவர்களிலேயே நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 75 ரன்களில் நெதர்லாந்தை வீழ்த்தியதுடன் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நஜிபுல்லா சத்ரான் ஆட்டநாயகனாகவும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை