ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு அங்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
Advertisement
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை மீட்டெடுக்கும் விதமாக வரும் ஆண்டு ஜனவரி மாதம் நெதர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நடத்த ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
Advertisement
அதன்படி ஜனவரி 21ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியையும், ஜனவரி 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளையும் நடத்த ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இத்தொடர் முடிந்த கையோடு ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.