ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!

Updated: Wed, Jan 10 2024 18:39 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் வந்திருக்கிறார். மேலும் விராட் கோலியும் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

இத்தோடு மிக முக்கியமாக விக்கெட் கீப்பராக டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டிருக்கிறார். கேஎல் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் வெளியில் இருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் சஞ்சு சாம்சன் சதம் அடித்தது அவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது.

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக ரஷீத் கான் அறுவை சிகிச்சை செய்திருந்த காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது ஆஃப்கானிஸ்தான் அணிவுடன் இணைந்து இந்தியாவிற்கு வந்துள்ள ரஷீத் கான், நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான், “ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை. ஆனாலும் அவர் அணியுடன் இணைந்து இருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்தபடி அவர் விரைவில் உடல் தகுதி பெறுவார் என்று நம்புகிறோம். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறார். ரஷீத் கான் இல்லாமல் நாங்கள் போராடுவோம் என்று தெரியும். ஆனால் அது நிறைய இருக்காது. அவருடைய அனுபவம் எங்களுக்கு முக்கியமானதுதான். 

ஆனால் இது கிரிக்கெட் நீங்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடுவது மிகவும் கடினமான காரியம். ஆனால் அவர்களுக்கு எதிராக விளையாடி சிறப்பாக செயல்பட்டு காண்பிக்கவே வந்திருக்கிறோம். எங்களிடம் நல்ல டி20 வீரர்கள் இருக்கிறார்கள். எங்கள் அணி வீரர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். எனவே அவர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவிற்கு எதிராக நாங்கள் ஒரு நல்ல தொடரை பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை