நீங்கள் செய்தது எளிதான சாதனையல்லா - விரேந்திர சேவாக் பாராட்டு!

Updated: Tue, Dec 07 2021 11:10 IST
Ajaz Patel Recalls Sehwag Thrashing Him In Nets; Viru Replies With Praises For The 10-Wicket Man (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 1 -0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய அவரது இந்த சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. 

அவரின் இந்த சாதனைக்காக பாராட்டுக்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் குவிந்துவர இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கும் தனது பாராட்டினை அவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து சேவாக்கின் பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் சாதித்தது எவராலும் எளிதாக செய்ய முடியாத ஒன்று. ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் என்பது மிகச் சிறப்பான ஒன்று. இந்த நாள் உங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கும். மும்பையில் பிறந்து அதே மும்பையில் நீங்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது மிகப்பெரிய ஒன்று. வாழ்த்துக்கள் இனிவரும் காலங்களிலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று சேவாக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த வாழ்த்துக்கு பதிலளித்த அஜாஸ் படேல் சேவாக் உடனான ஒரு நினைவினை பகிர்ந்துள்ளார். அதன்படி ஒரு முறை தான் நெட் பவுலராக சேவாக்கிற்கு எதிராக பந்துவீசும் போது சேவாக் தனது பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தார் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை