‘நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாதிங்க’ - அஜித் அகர்கர்

Updated: Mon, May 31 2021 22:33 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள், இந்திய அணிதான் வெற்றி பெறும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் அஜித் அகர்கர், நியூசிலாந்து அணியை பலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அகர்கர், “இறுதிப் போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என பலர் கருத்து கூறி வருகின்றனர். நியூசிலாந்து அணி ஒன்றும் சாதாரண அணி கிடையாது. இறுதிப்போட்டி வரை வந்துள்ளார்கள். ஆனால், அவர்களைக் குறித்து மதிப்பிடக் கூடாது. கேன் வில்லியம்சன் அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியும். அதேசமயம் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சிலும் எந்த குறையும் இல்லை. 

நாம் கடந்த முறை நியூசிலாந்து சென்றபோது, அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றோம். இங்கிலாந்து காலநிலையில் நியூசிலாந்து போன்றுதான் இருக்கிறது. இதனால் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். நமது அணியிலும் உலகத்தரம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். இதனால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை