ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி; தென் ஆப்பிரிக்க அணி முன்னேற்றம்!

Updated: Mon, Jun 16 2025 13:09 IST
Image Source: Google

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையிலும் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான புதுபிக்கபட்ட தரவரிசை தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைக் தக்கவைத்துள்ளது. 

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் அப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐசிசி தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று தங்கள் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்திய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் தென் அப்பிரிகாவிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ள நிலையிலும், ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 123 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதே நேரத்தில், தென்னாப்பிரிக்கா அதன் வரலாற்று வெற்றிக்குப் பிறகு தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணி 114 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய நிலையில், இங்கிலாந்து அணி ஒரு இடம் பின் தங்கியதுடன் மூன்றாம் இடத்திர்கு தள்ளப்பட்டுள்ளது. இரு அணிகளும் இடையே ஒரே ஒரு புள்ளி மட்டும் வித்தியாசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் நியூசிலாந்து தோல்வி மற்றும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வி என் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த இந்திய அணியானது 105 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. இதுதவிர்த்து நியூசிலாந்து அணி ஐந்தாம் இடத்திலும், இலங்கை அணி 6அம் இடத்திலும் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி 7அம் இடத்தைப் பிடித்துள்ளது. மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் 10 இடங்கள்குள் நீடிக்கின்றன. 

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில் தான் இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரெலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள காரணத்தால், இத்தொடர்களுக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் தொடரின் முடிவில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை