ICC Test Rankings: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளனர். 

Advertisement

நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி தங்களுடைய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஐசிசி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதனை படைத்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், ஹாரி புரூக் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5அம் இடத்திலும் தொடர்கின்றனர்.

அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா 6ஆம் இடத்தில் நீடிக்கும் நிலையில், இந்திய அணியின் ரிஷப் பந்த், பாகிஸ்தானின் சௌத் ஷகீல் ஆகியோர் ஒரு இடம் முன்னேறி 8அம் இடத்தைப் பிடித்துள்ளனர். அதேசமயம் டேரில் மிட்செல் 2 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்து அசத்திய தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ரம் 7 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தை பிடித்துள்ளார். 

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சோபிக்க தவறிய ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 4 இடங்களும், உஸ்மான் கவாஜா 6 இடங்களும், மார்னஸ் லபுஷாக்னே 3 இடங்களும், கேமரூன் க்ரீன் 8 இடங்களும் பின் தங்கியுள்ளனர். இதுதவிர்த்து டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்திலும், காகிசோ ரபாடா இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

இந்த பட்டியலில் பாகிஸ்தானின் நோவ்மன் அலி 2 இடங்கள் முன்னேறிய நிலையில், ஆஸ்திரேலிய ஆணியின் ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லையன் ஆகியோர் ஒரு இடம் பின் தங்கியுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஒரு இடம் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 9 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், மிட்செல் ஸ்டார்க் 3 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News