வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆலன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டாம் லேதம் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச தரப்பில் சொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின் ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் அதிரடியாக விளையாடி நம்பிக்கையளித்தார். பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவரும் 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியால் 134 ரன்காளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் டாம் லேதம் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாகவும், வங்கதேசத்தில் நசும் அஹ்மதும் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டனர்.