மிதாலியின் சாதனையை தகர்த்த எமி ஹண்டர்!
ஹராரேவில் ஜிம்பாப்வே - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது.
இதில் தனது 16-வது பிறந்த நாளின்போது சதமடித்த அயர்லாந்து வீராங்கனை எமி ஹண்டர், 121 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவரை அவர் 4 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதன்பிறகு பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் மட்டும் எடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என அயர்லாந்து அணி வென்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் சதமடித்த எமி ஹண்டர், புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இளம் வயதில் சதமடித்தவர் என்கிற பெருமை இதற்கு முன்பு இந்தியாவின் மிதாலி ராஜிடம் இருந்தது. அவர் 16 வருடங்கள் 205 நாள்களில் சதமடித்திருந்தார்.
இந்நிலையில் எமி ஹண்டர் தனது 16ஆவது பிறந்த நாளின்போதே சதமடித்த புதிய உலக சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இளம் வயதில் சதமடித்தவர்கள்
- எமி ஹண்டர் - 16 வருடங்கள்
- மிதாலி ராஜ் - 16 வருடங்கள், 205 நாள்கள்
- சாஹித் அப்ரிடி - 16 வருடங்கள், 217 நாள்கள்