எனது திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன் - லஹிரு குமாரா!

Updated: Thu, Oct 26 2023 21:41 IST
எனது திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன் - லஹிரு குமாரா! (Image Source: Google)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார்.

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் நிஷங்கா 77 ரன்களையும், சமரவிக்ரமா 65 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரா 7 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டு கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது பந்து சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் லஹிரு குமாரா, “இங்கிலாந்து போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக இப்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. இன்றைய போட்டியில் நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நான் கடந்த போட்டியிலிருந்து இந்த போட்டிக்காக என்னுடைய பந்துவீச்சில் பெரிய திட்டங்களை மாற்றிக் கொள்ளவில்லை. 

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது எனது பந்துவீச்சு சிறப்பாக இல்லை. ஆனால் இன்றைய போட்டியில் நான் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதற்காக தீவிர வலை பயிற்சியை மேற்கொண்டேன். அதன் பலனாகத்தான் இன்றைய போட்டியில் நான் சிறப்பாக பந்துவீசி உள்ளேன். மேத்யூஸ் போன்ற ஒரு அனுபவ வீரர் அணிக்குள் மீண்டும் வரும்போது அது நல்ல உத்வேகத்தை தந்துள்ளது. 

அவர் எனக்கு தனிப்பட்ட வகையில் நல்ல ஆதரவை கொடுத்து இடைவெளிகளின் போது ஆலோசனைகளையும் வழங்கினார். இன்றைய போட்டியில் என்னுடைய திட்டம் எல்லாம் மிகவும் சிம்பிளாகவே இருந்தது. அதாவது மிடில் ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் ஒழுக்கமாக பந்துவீசி விக்கெட்டுகளை பரிசாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அந்த திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை