யார்க்கரில் ஸ்டம்புகளை தகர்த்த ஆன்ரிச் நோர்ட்ஜே; வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணியானது ஃபகர் ஸமான் மற்றும் ஜூவெல் ஆண்ட்ரூ ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜூவெல் ஆண்ட்ரூ 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களையும், ஃபகர் ஸமான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் நோர்ட்ஜே, ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணியில் எவின் லூயிஸ் 29 ரன்களையும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 25 ரன்களையும், கைல் மேயர்ஸ் 39 ரன்களையும், ஓடியன் ஸ்மித் 27 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் டோமினிக் டிரேக்ஸ் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில், இப்போட்டியில் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்போட்டியில் ஆன்ரிச் நோர்ட்ஜே வீசிய அபாரமான யார்க்கர் பந்தை தவறவிட்ட டெடி பிஷப் க்ளீன் போல்டாகியதுடன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.