டிம் பெயின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆஸ்கர் ஆஃப்கான்!

Updated: Sun, Sep 12 2021 21:02 IST
Image Source: Google

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனான டிம் பெயின் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது கடினம் என்றும், தாலிபான்களின் வருகையால் அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் எதிர்காலம் முடங்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் ஆப்கானிஸ்தான் அணியுடன் எந்த ஒரு அணியும் பங்கேற்று விளையாடுவது சந்தேகம் என்று கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி மற்ற அணிகளும் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என்ற வெளிப்படையான கருத்தினை டிம் பெயின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கருத்து சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

இதற்கு பதிலளித்த ஆப்கானிஸ்தானின் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆஃப்கான், “மிஸ்டர் பெயின் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் மட்டுமல்ல அனைத்து ஐசிசி போட்டிகளிலும் விளையாட உரிமை உள்ளது. அதுமட்டுமின்றி எங்களது நாட்டின் உள்கட்டமைப்பு வைத்தே நாங்கள் உலகின் டாப் 10 அணிகளுடன் மோதி வருகிறோம். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி நாங்கள் விளையாடி வருவது தொழில்முறை கிரிக்கெட்டிற்கு நாங்கள் கொடுக்கும் உழைப்பு தான். இந்த இடத்தை எட்டுவது கடினம் என்பது உங்களுக்கும் தெரியும். அதைத்தான் நாங்களும் சொல்ல விரும்புகிறோம். இதுபோன்று நீங்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று நேரடியாக டிம் பெயினுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை